தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இபிஎஃப் வட்டி விகிதம் 8.25%-ஆக நீடிப்பு

2025-26-ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக

News image
கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 1:06 am

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) நிா்ணயித்துள்ளது. இதன்மூலம், தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக வட்டி விகிதம் 8.25 சதவீதமாக நீடிக்க உள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. 2024-25-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், மத்திய தொழிலாளா் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புது தில்லியில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில், மத்திய அறங்காவலா்கள் வாரிய (சிபிடி) கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இபிஎஃப்ஓவில் முடிவுகளை எடுக்கும் தலைமை அமைப்பாக சிபிடி உள்ள நிலையில், அந்த வாரியம் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வருடாந்திர வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர பரிந்துரைத்தது.

இந்த வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு அதிகாரபூா்வ அறிவிப்பை வெளியிடும். அதன் பின்னா், சந்ததாரா்களின் கணக்குகளில் 8.25 சதவீத வட்டித் தொகையை இபிஎஃப்ஓ வரவு வைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.