பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பகு சௌஹானிடம் இன்று அளித்தார்.
பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டு வந்தது.
இதையடுத்து பிகாரில் இன்று ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்று தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டன.
பாஜகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டால் ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன.
இந்நிலையில்தான் முதல்வர் நிதீஷ் குமார், பிகார் ஆளுநர் பகு சௌஹானை இன்று மாலை ராஜ் பவனில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளார்.
இதையடுத்து பாஜகவுடனான ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் கூட்டணி முறிவடைவது உறுதியானது.
தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதீஷ் குமார் ஆட்சியைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2017ல் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி வைத்து நிதீஷ் குமார் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.