தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஞானேந்திர பிரசாத், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஞானேந்திர பிரசாத் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
பின்னர் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மியாப்பூர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
'அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் அவர் கடந்த சில நாட்களாக அவர் மாடியில் உள்ள தனி அறையில் தங்கியுள்ளார். விசாரணைக்குப் பிறகே தற்கொலைக்கான காரணம் தெரிய வரும்' என்று போலீசார் தெரிவித்தனர்.
பாஜக தலைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிர்ஷ்டமில்லாத டேவிட் மில்லர்..! பங்கேற்ற 12 ஐசிசி கோப்பைகளிலும் தோல்வி!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மிதுனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: ரிஷபம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மேஷம்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

