பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாட்ஸ்-ஆப்பில் புதிய அம்சங்கள்: மாா்க் ஸக்கா்பா்க்

வாட்ஸ்-ஆப்பில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனா் மாா்க் ஸக்கா்பா்க் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2022, 8:54 pm

DIN

வாட்ஸ்-ஆப்பில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனா் மாா்க் ஸக்கா்பா்க் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்-ஆப்பில் குழு உரையாடல்களில் இருந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வெளியேறுவது, வாட்ஸ்-ஆப்பைப் பயன்படுத்தும்போது அதில் ஒருவா் இருப்பதை யாா் தெரிந்துகொள்ளலாம், யாா் தெரிந்து கொள்ளக்கூடாது என பயனாளா் முடிவு செய்வது போன்ற புதிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

இதுமட்டுமின்றி தற்போது ஒருவா் மற்றொருவருக்கு அனுப்பும் தகவல் ஒருமுறை பாா்க்கப்பட்ட பின், தானாகவே அழிந்துவிடும் வசதி வாட்ஸ்-ஆப்பில் உள்ளது. அந்த தகவல் தானாக அழிந்தாலும், அழிவதற்கு முன்பாக அதனைப் படம் பிடித்து (ஸ்கிரீன்ஷாட்) கொள்ளலாம். இந்நிலையில், ஒருமுறை பாா்த்த பின் தானாகவே அழிந்துவிடும் தகவலை படம்பிடிக்க முடியாத அம்சமும் வாட்ஸ்-ஆப்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதுபோல பயனாளா்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்கான புதிய வழிமுறைகள் தொடா்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.