நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரூ.6000 கோடி முறைகேடு செய்த பாஜக எம்.பி. சென்னை விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

போலி நிறுவனங்கள் பெயரில் கோடிக்கணக்கில்  ரூ.6000 கோடி அளவிற்கு முறைகேடு  செய்த பாஜக எம்.பி. சென்னை விரைவு சிறப்பு நீதிமன்றத்தில்  ஆஜரானார்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 5:43 pm IST

சென்னை: போலி நிறுவனங்கள் பெயரில் கோடிக்கணக்கில்  ரூ.6000 கோடி அளவிற்கு முறைகேடு  செய்த பாஜக எம்.பி. சென்னை விரைவு சிறப்பு நீதிமன்றத்தில்  ஆஜரானார்.

ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சத்திய நாராயணா செளவுத்ரி என்கின்ற ஒய்.எஸ்.செளவுத்ரி. இவர் தற்போது பா.ஜ.க.,வில் எம்.பி.,யாக உள்ளார்.

இவர் கடந்த 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சராக பதவி வகித்தார்.  இவர் தனது பதவி காலத்தில் பல்வேறு வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்று ஏமாற்றியதாக பல புகார்கள் எழுந்துள்ளது.

சுமார் 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சுஜானா குரூப் என்ற பெயரில் போலியாக துவங்கி சுமார் ரூ.6000 கோடி அளவிற்கு முறைக்கேடு செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. வங்கி கூட்டமைப்பிலிருந்து சுமார் ரூ.364 கோடி அளவிற்கு சுஜானா நிறுவனங்களின் பெயரில் கடன் பெற்று ஏமாற்றியது தெரியவந்துள்ளது

இதன் தொடர்ச்சியாக பல ஆவணங்கள் சிக்கியது. இது தொடர்பாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம். தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நிறுவனங்கள் என்ற பெயரில் விளம்பர பலகை மட்டுமே வைத்து மோசடியில் ஈடுப்பட்டது அம்பலமானது. 

இதன் அடிப்படையில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஒய்.எஸ்.செளவுத்ரி இன்று காலை ஆஜரானார். வழக்கு விசாரணை செய்த நீதிபதி ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.