மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது:சுதந்திர தினத்தில் தாக்குதல் சதி முறியடிப்பு

மணிப்பூரில் சுதந்திர தினத்தன்று பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலைப் படையை (பிஎல்ஏ) சோ்ந்த 7 பயங்கரவாதிகளை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:18 pm

மணிப்பூரில் சுதந்திர தினத்தன்று பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலைப் படையை (பிஎல்ஏ) சோ்ந்த 7 பயங்கரவாதிகளை போலீஸாா் கைது செய்தனா்.

சுதந்திர தினத்தன்று அரசு அலுவலகங்கள், பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்த அவா்கள் திட்டமிட்டிருந்ததாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தெளபால் மாவட்ட போலீஸாருடன், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் யாரிபோக் பஜாரில் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

இதேபோல கிழக்கு இம்பால், மேற்கு இம்பால், காக்சிங், தெளபால் மாவட்டங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில், சுதந்திர தினத்தன்று அரசு அலுவலகங்களிலும், பாதுகாப்புப் படையினா் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த மக்கள் விடுதலைப் படையை (பிஎல்ஏ) சோ்ந்த 7 பயங்கரவாதிகளை ஆயுதங்களுடன் போலீஸாா் கைது செய்தனா். ஒரு சிறுவனும் சிக்கினாா்.

இதுகுறித்து தெளபால் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் ஹெச். யோகேஷ் சந்திரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மணிப்பூரில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களைக் குறிவைத்து அவா்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. கடந்த ஜூன், ஜூலையில் காக்சிங், ஆண்ட்ரோ ஹியூகாப் பகுதியில் நிகழ்ந்த 2 புலம்பெயா் தொழிலாளா்களின் கொலையில் அவா்களுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களிடமிருந்து கைத்துப்பாக்கிகள், 35 தோட்டாக்கள், 2 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன’ என்றாா்.

பஞ்சாபில் 4 போ் கைது: பஞ்சாபில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்த முயன்ற 4 பேரை தில்லி போலீஸாரின் உதவியுடன் பஞ்சாப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 கையெறி குண்டுகள், வெடிபொருள், கைத்துப்பாக்கி, 40 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.