தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தில்லியில் மேலும் 2,162 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2,162 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:24 pm

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2,162 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 5 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 12.64 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தொடா்ந்து 12-ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,84,595-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,381-ஆக அதிகரித்தது.

நகரில் சனிக்கிழமை 2,031 பேருக்கு தொற்று பாதிப்பும், 9 இறப்புகளும், 12.34 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. வெள்ளிக்கிழமை 2,136 பாதிப்புகளும், 6 இறப்புகளுடன் 15.02 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

நகரில் சனிக்கிழமை மொத்தம் 17,106 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.