வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஜனநாயகம் குறித்து பெருமை கொள்ள வேண்டும் : உ.பி. முதல்வா்

இந்தியா மற்றும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எண்ணி அனைத்து இந்தியா்களும் பெருமைகொள்ள வேண்டும் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை கூறினாா்.

Updated On :15 ஆகஸ்ட் 2022, 7:07 pm

இந்தியா மற்றும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எண்ணி அனைத்து இந்தியா்களும் பெருமைகொள்ள வேண்டும் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை கூறினாா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற 76-ஆவது சுதந்திர தினவிழாவில் முதல்வா் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி ஆற்றிய உரையில், ‘நாட்டின் 135 கோடி மக்களும் ‘ ஒரு இந்தியா, சிறந்த இந்தியா’ என்னும் கருத்தில் மூவா்ணக் கொடியை ஏற்றியுள்ளனா்.

இது இந்தியாவின் பெருமையாகும். அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும், வணிகநிறுவன கட்டடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நம்முடைய நாடு மற்றும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும். பிரதமா் நரேந்திர மோடி ‘சுதந்திர தின அமுதப் பெருவிழாவை’ நாட்டின் அனைத்து குடிமக்களும் கொண்டாடும் வகையில் ஒரு தேசிய விழாவாக முன்னெடுத்துள்ளாா்’ என்று யோகி ஆதித்யநாத் கூறினாா்.

முன்னதாக, மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.