ஆமதாபாத்: குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மூண்ட கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு குற்றவாளிகளில் சிலர் நல்ல சன்மார்க்க பிராமணர்கள் என்று குஜராத் பாஜக எம்எல்ஏ ரௌல்ஜி சான்றிதழ் அளித்துள்ளார்.
11 குற்றவாளிகளையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்ய அமைக்கப்பட்டக் குழுவில் கோத்ரா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சி.கே. ரௌல்ஜியும் ஒருவர்.
இதையும் படிக்க | அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)
15 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கும் 11 பேரும், அந்தக் குற்றத்தில் ஈடுபட்டார்களாக என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மூண்ட கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் மாநில அரசின் சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
குஜராத் மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 11 குற்றவாளிகளும் கோத்ரா சிறைச்சாலையிலிருந்து கடந்த திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் 11 பேரும் 15 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைக் காரணம் காட்டி குற்றவாளிகளில் ஒருவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதன் மீது முடிவெடுக்க குஜராத் அரசைக் கேட்டுக் கொண்டது.
குஜராத் அரசு இது குறித்து முடிவெடுக்க ஒரு குழுவை அமைத்தது. பஞ்சமஹால்ஸ் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டக் குழுவினர், குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்து பரிந்துரை செய்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு குஜராத் அரசு சிறைச்சாலைக்கு கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தின் அடிப்படையில், 11 பேரும் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
11 குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில், குஜராத் பாஜக எம்எல்ஏவும் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தார் என்ற அதிர்ச்சித் தகவல் நேற்று வெளியான நிலையில், இன்று குற்றவாளிகளுக்கு அவர் நற்சான்றிழ் அளித்திருப்பது மேலும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பில்கிஸ் பானு வழக்கு
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு மிகப்பெரிய கலவரம் மூண்டது. அப்போது ரன்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு (21) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது 3 குழந்தைகள் கலவரத்தில் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு முதலில் ஆமதாபாதில் நடைபெற்றது. பின்னர் பானுவின் ஆட்சேபத்தை ஏற்றுக் கொண்டு, மும்பைக்கு விசாரணை மாற்றப்பட்டது. மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் வழக்கு மீது விசாரணை நடத்தி, போலீஸார் உள்பட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் 11 பேரும் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 போலீஸார், 2 மருத்துவர்கள் ஆகியோருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 6 பேர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். ஒருவர் மேல்முறையீடு செய்யவில்லை. 6 பேரின் மேல்முறையீடு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே, பில்கிஸ் பானுவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்க குஜராத் அரசு முன்வந்தது. இதை நிராகரித்து விட்ட பானு, உச்சநீதிமன்றத்தில் தனக்கு அதிகப்பட்சமாக ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பில்கிஸ் பானு வசிக்க வீடு இன்றி மிகவும் இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருவது நீதிபதிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பு மற்றும் அவர் விரும்பும் பகுதியில் வீடு ஆகியவற்றை 2 வாரங்களுக்குள் அளிக்கும்படி குஜராத் அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 11 பேரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


