தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

தில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 20 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்
மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்

தில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 20 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மாலை நிறைவடைந்தது. இந்த சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். சிபிஐ சோதனை குறித்து பேசியுள்ள மணீஷ் சிசோடியா இத்தகைய சோதனைகளின் மூலம் தன்னை ஒடுக்கி விட முடியாது எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com