பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

'இது முதல் ரெய்டு அல்ல; இந்த சோதனையிலும் எதுவும் கிடைக்காது' - கேஜரிவால்

மணீஷ் சிசோடியா மீது இது முதல் ரெய்டு அல்ல என்றும் ரெய்டில் இப்போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார். 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 7:18 am

DIN

மணீஷ் சிசோடியா மீது இது முதல் ரெய்டு அல்ல என்றும் ரெய்டில் இப்போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார். 

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட சுமார் 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில் சிபிஐ இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் இதக்குறித்து காணொலியில் பேசியுள்ள தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், 

'இது முதல் ரெய்டு அல்ல. கடந்த 7 ஆண்டுகளில், மணீஷ் சிசோடியா மீது பல சோதனைகள் நடத்தப்பட்டன. அவர் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. என் மீதும், சத்யேந்தர் ஜெயின் மீதும், கைலாஷ் கெலாட்டிடமும் ரெய்டுகள் நடத்தப்பட்டன. ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. இப்போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. 

இன்று மணீஷ் சிசோடியா உலகின் சிறந்த கல்வி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிபிஐ அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகிறது. எனவே, நிறைய தடைகள் இருக்கும். நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் முதல் பக்கத்தில், தில்லியின் கல்விப் புரட்சியைக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. 

சிபிஐ தனது வேலையைச் செய்கிறது, அதனால் பயப்படத் தேவையில்லை. சிபிஐயை அதன் வேலையைச் செய்ய அனுமதிக்க வேண்டும், எங்களை தொந்தரவு செய்ய மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. தடைகள் வரும் ஆனால், வேலை ஒருபோதும் நிற்காது' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.