பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

'சிபிஐயை அன்புடன் வரவேற்கிறேன்; இந்த சதியெல்லாம் என்னை உடைத்துவிடாது'

சிபிஐயை அன்புடன் வரவேற்கிறேன்; இந்த சதியெல்லாம் என்னை உடைத்துவிடாது என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

News image

மணீஷ் சிசோடியா

Updated On :19 ஆகஸ்ட் 2022, 10:49 am


புது தில்லி: சிபிஐயை அன்புடன் வரவேற்கிறேன்; இந்த சதியெல்லாம் என்னை உடைத்துவிடாது என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 20 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சிசோடியாவின் வீடு மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அரவா கோபி கிருஷ்ணா வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. 

இந்த நிலையில், சிசோடியா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மாணவர்களின் வருங்காலத்தை ஒளிமயமாக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். 

நாட்டுக்காக நல்ல பணிகளை ஆற்றி வருவோரை துன்புறுத்துவது என்பது துரதிருஷ்டவசமானது. அதனால்தான் உலகிலேயே நமது நாடு முதல் இடத்துக்கு வரமுடியவில்லை என்று சிசோடியா கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற சதியெல்லாம் என்னை உடைத்துவிடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.