இந்தியாவில் 50 வழக்குகள் தீர்க்கப்பட்டால் புதிதாக 100 வழக்குகள் பதியப்படுவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் கருத்தரங்கு தில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “இந்தியாவில் ஒரு நீதிபதி 50 வழக்குகளைத் தீர்த்துவைத்தால் அவரிடம் மேலும் 100 வழக்குகள் வருகிறது” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | உத்தரகண்ட் மேகவெடிப்பு பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர் தாமி
மேலும் அவர், “நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பீடுகள் தவறானவை.
ஏனெனில் இந்தியாவில் நிலவும் சூழலும், மற்ற நாடுகளில் நிலவும் சூழலில் முற்றிலும் வெவ்வேறானவை. மக்கள் முன்பு இருந்ததைக் காட்டிலும் நீதிமன்றங்களை அணுகுவதில் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதேநேரத்தில் நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க சாத்தியமான வழிகளில் உதவ சட்டத்துறை எப்போதும் தயாராகவே உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


