வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வருகிற செப்டம்பர் மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கும் அண்டை நாடான வங்கதேசத்துக்கு இடையே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு வருமாறு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி ஷேக் ஹசீனா இந்தியா வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று நாள் பயணமாக வரும் அவர் செப்டம்பர் 8 ஆம் தேதி வங்கதேசம் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியின் அழைப்புக் கடிதத்தை வங்கதேசத்துக்கான இந்திய தூதர் விக்ரம் கே துரைசுவாமி, பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் அளித்தார்.
ஷேக் ஹசீனா செப்டம்பரில் இந்தியா வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் இக்ஷானுல் கரீம் கூறினார்.
இறுதியாக, கடந்த 2019ல் ஷேக் ஹசீனா இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு

கரூா் நிதி நிறுவனத்தில் திருடிய வழக்கில் தலைமறைவானவா் திருப்பூரில் கைது

கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
மாா்ச் 12-இல் தவெக ஆா்ப்பாட்டம்!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

