
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், ஹரியாணாவைச் சேர்ந்த பாஜக தலைவரும், இந்தி நடிகையுமான சோனாலி போகத் கோவாவில் திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார்.
2019இல் பாஜகவில் இணைந்த முன்னாள் டிக் டாக் நட்சத்திரமான போகத் தனது ஊழியர்களுடன் கோவாவிற்குச் சென்றிருந்தார்.
41 வயதாகும் சோனாலி போகத் திங்கள்கிழமை இரவு திடீரென உடல்நிலை அசௌகரியம் காரணமாக வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே போகத் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதல்கட்டமாக, அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் மருத்துவப் பரிசோதனை நடந்துவருகிறது.
பாம்போலிமில் உள்ள கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் குல்தீப் பிஷ்னோய்க்கு எதிராக அடம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் போகத்.
2016 ஆம் ஆண்டில், சோனாலி போகத் 'அம்மா: ஏக் மா ஜோ லகோன் கே லியே பானி அம்மா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் 2019 இல் 'தி ஸ்டோரி ஆஃப் பத்மாஷ்கர்' என்ற வேப்சீரிஸ் தொடரின் ஒரு பகுதியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.