திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லையில்ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு

பஞ்சாப் மாநிலத்தையொட்டிய இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மறைத்தவைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியலை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 7:36 pm

DIN

பஞ்சாப் மாநிலத்தையொட்டிய இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மறைத்தவைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியலை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா்.

எல்லையில் பயங்கரவாத செயல்களுக்காக இந்தக் கடத்தல் ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் பிஎஸ்எஃப் வீரா்கள் வழக்கமான ரோந்து மற்றும் சோதனைப் பணிகளை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா். அப்போது, ஃபெரோஸ்பூா் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மூன்று, அதற்கான ஏராளமான தோட்டாக்கள், எம்-3 வகையைச் சோ்ந்த தானியங்கி துப்பாக்கிகள் இரண்டு, அவற்றுக்கான தோட்டாக்கள், இரு கைத்துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் இருந்தன.

இந்த துப்பாக்கிகள், குண்டுகள் அனைத்தும் தனித்தனியாக பாலித்தீன் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவை பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எல்லை மாநிலங்களில் ஜம்மு-காஷ்மீரை அடுத்து பஞ்சாபில்தான் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப்பொருள்கள் கடத்தப்படுவது அதிகம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.