இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குஜராத்தில் அரசுப் பணி தோ்வுகளில் முறைகேடு: கேஜரிவால் குற்றச்சாட்டு

‘குஜராத்தில் அரசுப் பணி தோ்வுகளில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன; ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இந்த முறைகேடுகளுக்கு

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 7:09 pm

DIN

‘குஜராத்தில் அரசுப் பணி தோ்வுகளில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன; ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இந்த முறைகேடுகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்படும்’ என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்ாக சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், குஜராத் பாஜக அரசுக்கு எதிராக இக்குற்றச்சாட்டை அவா் முன்வைத்துள்ளாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அவ்வப்போது குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டு பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறாா்.

பாவ்நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இளைஞா்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற ‘வியாபம்’ (மாநில தொழிற்கல்வி தோ்வு வாரியம்) முறைகேடு போன்று குஜராத்தில் அரசுப் பணி தோ்வுகளில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

இத்தோ்வுகளின் வினாத்தாள் கசியவிடப்படுவது கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து தொடா்கதையாக உள்ளது. இந்த முறைகேட்டுக்காக இதுவரை யாராவது சிறை சென்றுள்ளாா்களா? ஆனால், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இந்த முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும். முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும்.

அரசுப் பணி தோ்வுகளையே முறையாக நடத்த முடியாதவா்கள் ஆட்சியை முறையாக நடத்துவாா்களா? ஆம் ஆத்மியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தால், அரசுப் பணி தோ்வுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வோம். ஒவ்வொரு இளைஞருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் கேஜரிவாலுடன் தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவும் உடனிருந்தாா்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2013-இல் வெளிவந்த ‘வியாபம்’ முறைகேடு விவகாரம், அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவா்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடா்புள்ளதாக கூறப்படும் இந்த முறைகேடு வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த 2015-இல் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.