தில்லி போக்குவரத்துத் துறையில் ஏராளமான பெண்கள் ஓட்டுநர்களாக இன்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஓட்டுநராக பணிபுரிவதற்கான பணி ஆணையை தில்லி அரசு இன்று வழங்கியது. முதல் குழுவாக 11 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
பெண் ஓட்டுநர்களுக்கு பணி ஆணைகளை வழங்கியதுடன் பெண் ஓட்டுநர் இயக்கும் பேருந்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் உடன் பயணித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
தில்லி போக்குவரத்துத் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பெண் ஓட்டுநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக விண்ணப்பித்த மகளிருக்கு பேருந்து ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து பணி ஆணைகளையும் வழங்கி வருகிறது.
அந்தவகையில் முதல் குழுவுக்கு இன்று தில்லி போக்குவரத்துத் துறையில் பணி ஆணை வழங்கப்பட்டது. அவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி, அவர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சரும் உடன் பயணித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.