புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 9 பேர் பங்கேற்கவில்லை.
புது தில்லி முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பாஜகவினர் பேரம் பேசிவருவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆம் ஆத்மியின் 62 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், 62 எம்எல்ஏக்களில் 53 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், “பாஜகவின் ‘ஆப்ரேஷன் லோட்டஸ்’ தில்லியில் தோல்வி அடைந்துவிட்டது. 62 எம்.எல்.ஏ.க்களில் 53 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். சட்டப்பேரவைத் தலைவர் வெளிநாட்டில் இருப்பதாலும், மணீஷ் சிசோடியா ஹிமாச்சலில் இருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை. மீதமுள்ள 7 பேரிடம் முதல்வர் செல்போனில் பேசினார். அவர்கள் அனைவரும் கடைசி மூச்சு வரை முதல்வருடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எங்கள் கட்சியின் 12 எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் அழைத்து கட்சியை உடைக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். 40 எம்.எல்.ஏ.க்களை கட்சியிலிருந்து பிரித்து அவர்களுக்கு தலா ரூ. 20 கோடி தருவதற்கு பேரம் பேசியுள்ளனர்.”
முன்னதாக, தங்கள் எம்எல்ஏக்கள் நான்கு பேரை ஈர்க்க பாஜக முயற்சி செய்ததாகவும், அவர்களுக்குத் தலா ரூ. 20 கோடி வழங்க அக்கட்சி முன்வந்ததாகவும் ஆம் ஆத்மி கட்சி நேற்று குற்றஞ்சாட்டியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அசத்தும் கென்-ன் யூத் டிரைலர்!
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்!
பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமுதாயத்தைக் கட்டமைப்போம்: குடியரசுத் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

