பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஹைதராபாத் கோஷமஹால் தொகுதி எம்எல்ஏ ராஜா சிங்கை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸாா் வியாழக்கிழமை மீண்டும் கைது செய்தனா்.
இஸ்லாமியா்களின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து எம்எல்ஏ ராஜா சிங் அண்மையில் சா்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடா்ந்து அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை நீதிபதி ஜாமீனில் விடுவித்தாா்.
இதனிடையே, ராஜா சிங் பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா். இந்தச் சூழலில் மங்கல்ஹாட் காவல் நிலையத்தில் ஏற்கெனவே ராஜா சிங் மீது பதிவான வழக்குகளின் அடிப்படையில், அவரை மீண்டும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தற்போது ஹைதராபாத் சொ்லபள்ளி மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா்.
ராஜா சிங் மீது பதிவான 101 குற்ற வழக்குகளில் 18 வழக்குகள் மதம் சம்பந்தப்பட்டவை என போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பதவி உயர்வு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஹைதராபாத் - கன்னியாகுமரி, கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில்கள் நிரந்தரம்!

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு: செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

