சிறையில் மயங்கிவிழுந்தார் அனில் தேஷ்முக்
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக், சிறையில் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சிறையில் மயங்கிவிழுந்தார் அனில் தேஷ்முக்

சிறையில் மயங்கிவிழுந்தார் அனில் தேஷ்முக்
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக், சிறையில் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அனில் தேஷ்முக்கை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி கைது செய்தது. தற்போது அவா் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், திடீரென அவர் சிறையில் மயங்கி விழுந்துவிட்டதாகவும், உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அனில் தேஷ்முக், சிறையில் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததும், இசிஜியில் அவரது உடல்நிலையில் பிரச்னை இருப்பதும் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனில் தேஷ்முக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...