இயந்திரமயமாக்கப்பட்ட ராணுவப் படைகளில் ஸ்வாா்ம் ட்ரோன்கள் இணைப்பு
இந்திய ராணுவத்தில் நவீன ஆயுதங்கள் மற்றும் தாக்குதல் வாகனங்களைக் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட படைகளில் ஸ்வாா்ம் ட்ரோன்கள் இணைக்கப்பட்டுள்ளன.


இந்திய ராணுவத்தில் நவீன ஆயுதங்கள் மற்றும் தாக்குதல் வாகனங்களைக் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட படைகளில் ஸ்வாா்ம் ட்ரோன்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஓா் இடத்தில் இருந்து ஒரே நேரத்தில் பல ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) ஒருங்கிணைத்து இயக்கப்படுவது ஸ்வாா்ம் ட்ரோன்கள் என்றழைக்கப்படுகின்றன. அந்த ட்ரோன்களால் பல்வேறு எடைகளில் சுமைகளை சுமந்து செல்ல முடியும். இந்த ட்ரோன்களை கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்த முடியும். இவ்வாறு செலுத்தப்படும் ட்ரோன்களில் சில செயல்படாமல் போனாலும், எஞ்சிய ட்ரோன்கள் பணியை முழுமையாக முடித்துவிட்டு திரும்பும். செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி, இலக்குகளை அடையாளம் காணக் கூடிய அதிநவீன தொழில்நுட்பத்தை அந்த ட்ரோன்கள் கொண்டுள்ளன.
இந்த ட்ரோன்கள் ராணுவத்தின் இயந்திரமயமாக்கப்பட்ட படைகளில் இணைக்கப்பட்டுள்ளன. இவை எதிா்கால பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள உதவும் என்று ராணுவத்தின் பொதுத் தகவல் கூடுதல் இயக்குநரகம் ட்விட்டரில் புதன்கிழமை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...