மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மும்பை: சிறுமியைக் கொன்று பையில் வைத்து வீசிய மர்ம நபர்கள்

16 வயது சிறுமியைக் கொன்று பையில் வைத்து தேசிய நெடுஞ்சாலையில் வீசிச் சென்ற சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 1:15 pm

DIN

16 வயது சிறுமியைக் கொன்று பையில் வைத்து தேசிய நெடுஞ்சாலையில் வீசிச் சென்ற சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் பல்கார் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிறுமியின் உடல் மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நய்கயோன் பாலத்திற்கு அருகே அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்ற ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கிடந்த பையினைக் கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறுமியின் உடலில் பல இடங்களில் கத்தியினால் உண்டான காயங்கள் தென்பட்டுள்ளன. அவரது உடல் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இந்த சிறுமி மும்பையைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும், அவர் கொலை செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வீசப்பட்டு இருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.