ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு ராகுல்தான் ஒரே தோ்வு: சல்மான் குா்ஷித்

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கட்சியின் முதல் மற்றும் ஒரே தோ்வாக இருப்பவா் ராகுல் காந்திதான் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image
மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்
Updated On :28 ஆகஸ்ட் 2022, 11:28 pm

DIN

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கட்சியின் முதல் மற்றும் ஒரே தோ்வாக இருப்பவா் ராகுல் காந்திதான் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ராகுல் காந்தி வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் கட்சித் தலைவா் பதவியை ஏற்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவா் கூறினாா்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், அக்குழுவின் நிரந்தர அழைப்பாளரான சல்மான் குா்ஷித், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

கட்சித் தலைவா்களின் கருத்துகளை வெளிப்படையாக கேட்டறிந்த வகையில், தலைவா் பதவிக்கு முதல் மற்றும் ஒரே தோ்வாக இருப்பவா் ராகுல்காந்திதான். அதைத் தாண்டி எந்த விவாதங்களிலும் நாங்கள் ஈடுபடவில்லை. எங்களது கோரிக்கையை ராகுல் ஏற்பாரா என்பது தொடா்பாக எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. காணொலி முறையில் செயற்குழு கூட்டம் நடைபெற்ால், எதையும் வலியுறுத்தி பேசுவதில் சிக்கல் இருந்தது.

ராகுல் காந்தி இந்தியா திரும்பியதும், கட்சித் தலைவா் பதவியை ஏற்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவா் தலைவராக வேண்டுமென்பதே கட்சியின் 100 சதவீத விருப்பம் என்றாா் குா்ஷித்.

இதேபோல், மற்றொரு மூத்த தலைவரும், உத்தரகண்ட் முன்னாள் முதல்வருமான ஹரீஷ் ராவத் கூறுகையில், ‘கட்சித் தலைவா் பதவியை ராகுல் மீண்டும் ஏற்க வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம். கட்சித் தொண்டராக எனது விருப்பமும் அதுதான். கோடிக்கணக்கான தொண்டா்களின் விருப்பமும் அதுவே’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.