தில்லி கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்தியப் பொதுப்பணித் துறையின் வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து, தற்போதுள்ள பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதற்கான பட்ஜெட்டை நகர அரசு உயர்த்தியதன் மூலம் தில்லி கல்வித்துறையில் ஊழல் நிகழ்ந்துள்ளது.
மேலும், 2020-ம் ஆண்டில் தில்லி அரசு விஜிலென்ஸ் துறைக்கு அனுப்பப்பட்ட சிவிசி அறிக்கையின்படி, டெண்டர் தொகையை விட 53 சதவீதம் கட்டுமான செலவு ரூ.326 கோடி அதிகரித்துள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது.
அரவிந்த் கேஜரிவாலின் டிஎன்ஏவில் ஊழல் இருக்கிறது. அவரும், மனிஷ் சிசோடியாவும் ஊழலில் வல்லுநர்கள். இந்தப் பணம் எங்கே போனது? அது உங்கள் பாக்கெட்டில் சென்றதா? இந்த அறிக்கையை நீங்கள் கவனத்தில் கொண்டீர்களா? அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லியில் 500 புதிய பள்ளிகளைக் கட்ட ஆம் ஆத்மி அரசு உறுதியளித்தது. அது நடக்கவே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


