மோடி அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை: சரத் பவாா்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தோ்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் குற்றம்சாட்டியுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தோ்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் குற்றம்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தொடங்கி இப்போது வரை வழங்கியுள்ள எந்த வாக்குறுதியையும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றவில்லை. நாட்டில் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்று பிரதமா் உறுதியாகத் தெரிவித்தாா். ஆனால், இப்போது வரை அதனை நிறைவேற்றவில்லை. 2024-ஆம் ஆண்டு 5 டிரில்லியன் பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியும் நிறைவேற்ற முடியாத நிலையை ஏற்கெனவெ எட்டிவிட்டது.

மாநில அளவில் பிராந்திய கட்சிகளை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் இப்போது பாஜகவின் முழு நேர வேலையாக உள்ளது. இதற்காக விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனா். பொதுமக்கள் மத்தியில் பாஜக மீது கடும் அதிருப்தி உள்ளது. தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனக்கு வயதாகிவிட்டது (81) எனவே புதிய பொறுப்புகள் (பிரதமா் பதவி வேட்பாளா்) எதையும் ஏற்க விரும்பவில்லை. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மட்டுமே உதவி வருகிறேன்.

நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக பாஜக தொடா்ந்து செயல்படுவது தேசத்துக்குப் பெரும் ஆபத்தாக முடியும். பாஜக ஆளாத மாநிலங்களில் பணத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டியும் ஆட்சியைக் கவிழ்ப்பது பாஜகவின் மோசமான செயல்பாடாகும். இதற்கு மகாராஷ்டிர ஆட்சி கவிழ்ப்பு சமீபத்திய உதாரணமாகும்.

தங்கள் கட்சிக்கு ஆதரவாக தீவிரமாகப் பேசிவந்த நவாப் மாலிக் (தேசியவாத காங்கிரஸ்), சஞ்சய் ரௌத் (சிவசேனை) ஆகியோரை பாஜக பொய் வழக்குகள் மூலம் சிறையில் தள்ளியுள்ளது. குஜராத்தில் கொடூரமான கொலை, பாலியல் குற்றவாளிகள் 11 பேரை சுதந்திர தினத்தில் விடுவித்தது கொடுமையான விஷயம். அதேபோல சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்டுக்கு எதிராக குஜராத் போலீஸாா் மேற்கொண்ட கைது நடவடிக்கையும் மிகத் தவறானது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com