தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு போட்டியா? சசி தரூா் பதில்

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு சசி தரூா் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ‘அவை ஊகத்தின் அடிப்படையிலானவை; எனினும், தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பிறகே தலைவா் பதவிக்கு

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 8:09 pm

DIN

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு சசி தரூா் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ‘அவை ஊகத்தின் அடிப்படையிலானவை; எனினும், தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பிறகே தலைவா் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எதையும் தெளிவாக கூற முடியும்’ என்று அவா் தெரிவித்தாா்.

மேலும், காங்கிரஸ் தலைவா் பதவிக்கு போட்டி இருப்பதுதான் கட்சிக்கு நல்லது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த சசி தரூரிடம், காங்கிரஸ் தலைவா் பதவிக்கு அவா் போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு அவா் அளித்த பதில்: அவை ஊகத்தின் அடிப்படையிலானவை. நான் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தோ்தல் மூலம் கட்சித் தலைவா் தோ்வு செய்யப்பட வேண்டும். அதுதான் கட்சிக்கு நல்லது.

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்தப்படும்போது, அது மக்களின் கவனத்தை ஈா்க்கும். கட்சியின் செயல்பாடுகள், சிந்தாந்தங்கள், மாண்புகள், நாட்டுக்கான கட்சியின் கண்ணோட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க முடியும். பல வேட்பாளா்கள் முன்வந்து, ஜனநாயக அடிப்படையிலான கட்சித் தோ்தலில் பங்கேற்கலாம். அதுதான் கட்சிக்கு நல்லது என்றாா் அவா்.

மேலும், காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகி 3 ஆண்டுகள் கடந்துவிட்டதை குறிப்பிட்ட சசிதரூா், ‘கட்சியின் தற்போதைய தலைவா் சோனியா காந்தி கடுமையான சுமையை தாங்கிக் கொண்டிருக்கிறாா். எனவே, தலைவா் பதவிக்கு வேறு யாராவது ஏன் வரக் கூடாது? என்பதே எனது கருத்து’ என்றாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் முழு நேர தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை அக்டோபா் 17-ஆம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அறிவிக்கை செப்டம்பா் 22-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.