விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதியில் தமிழிசை சுவாமி தரிசனம்: தரிசன நேர மாற்றத்துக்கு பாராட்டு

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  இன்று (03/12/2022) திருப்பதி அருள்மிகு ஏழுமலையான் திருக்கோயிலில் தரிசனம் செய்தார்.

News image
திருப்பதியில் தமிழிசை சுவாமி தரிசனம்
Updated On :3 டிசம்பர் 2022, 12:12 pm

DIN


திருப்பதி: தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  இன்று (03/12/2022) திருப்பதி அருள்மிகு ஏழுமலையான் திருக்கோயிலில் தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தராஜனுக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் மற்றும் ஏழுமலையான் படத்துடன் 2023ஆம் ஆண்டுக்கான நாள்காட்டியும் வழங்கப்பட்டது.

அப்போது, காலை 5 மணிக்கு இருந்த விஐபி தரிசன நேரத்தை காலை 10 மணிக்கு மாற்றி இரவு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இறைவனை தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் காலையில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் நேரம் மாற்றப்பட்டதற்கும் தமிழிசை பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

அதாவது, விஐபி தரிசன நேரத்தை மாற்றி அமைத்து பொதுமக்கள்  பயன்பெறும் வகையில் மக்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசன நேரத்தை மாற்றியமைத்த திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.