தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குஜராத்தில் 7-ஆவது முறையாக பாஜக வெற்றி:தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் முடிவு

குஜராத்தில் தனிப் பெரும்பான்மையுடன் 7-ஆவது முறையும், ஹிமாசல பிரதேசத்தில் குறைந்த தொகுதிகள் வித்தியாசத்திலும் பாஜக வெற்றி பெறும் என்று தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

News image
Updated On :5 டிசம்பர் 2022, 8:33 pm

DIN

குஜராத்தில் தனிப் பெரும்பான்மையுடன் 7-ஆவது முறையும், ஹிமாசல பிரதேசத்தில் குறைந்த தொகுதிகள் வித்தியாசத்திலும் பாஜக வெற்றி பெறும் என்று தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் டிச.1 மற்றும் டிச.5-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. கடந்த நவ.12-ஆம் தேதி ஹிமாசல பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் டிச.8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இரு மாநில தோ்தல் தொடா்பாக வடநாட்டு செய்தித் தொலைக்காட்சிகள் மேற்கொண்ட தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில் குஜராத்தில் தனிப் பெரும்பான்மையுடன் 7-ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

அதேவேளையில், ஹிமாசல பிரதேசத்தில் குறைந்த தொகுதிகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறும் என்று அந்த முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=====================

குஜராத் பேரவைத் தோ்தல்

மொத்த தொகுதிகள்-182

பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகள்-92

செய்தித் தொலைக்காட்சிகள் கணிப்பில்

கட்சிகள் வெல்லக் கூடிய தொகுதிகள்

மாநிலங்கள் கட்சிகள் டிவி9 குஜராத்தி நியூஸ் எக்ஸ் ரிபப்ளிக்

குஜராத் பாஜக 125-130 117-140 128-148

காங்கிரஸ் கூட்டணி 40-50 34-51 30-42

ஆம் ஆத்மி 3-5 6-13 2-10

மற்றவை 3-7 1-2 0-3

========================

ஹிமாசல பிரதேச தோ்தல்

மொத்த தொகுதிகள்-68

பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகள்-35

மாநிலங்கள் கட்சிகள் நியூஸ் எக்ஸ் ரிபப்ளிக் இந்தியா டிவி

ஹிமாசல் பாஜக 32-40 34-39 35-40

காங்கிரஸ் கூட்டணி 27-34 28-33 26-31

ஆம் ஆத்மி 0 0-1 0

================================

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.