விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மும்பையில் ஜனவரி 14ல் இரண்டு அடுக்கு மின்சாரப் பேருந்து அறிமுகம்

மும்பையில் வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி இரண்டு அடுக்கு மின்சாரப் பேருந்து அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. அன்றைய தினம் நகரம் முழுக்க குறைந்தது 10 இரண்டு அடுக்குப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவ

News image
Updated On :5 டிசம்பர் 2022, 1:04 pm

DIN

மும்பையில் வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி இரண்டு அடுக்கு மின்சாரப் பேருந்து அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. அன்றைய தினம் நகரம் முழுக்க குறைந்தது 10 இரண்டு அடுக்குப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி 10 இரண்டு அடுக்குப் பேருந்துகள் நகரம் முழுக்க தனது இயக்கத்தைத் தொடங்கும். இது படிப்படியாக 50 ஆக அதிகரிக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி மின் விநியோகம் மற்றும் போக்குவரத்து (பிஇஎஸ்டி) நிறுவன பொது மேலாளர் லோகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் மின்சாரப் பேருந்து போக்குவரத்துத் தொடங்கும், வரும் ஜனவரியில் இரண்டு அடுக்கு பேருந்து சேவை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பேருந்துகளில், பயணிகள் செயலிகள் வாயிலாக தங்களது இருக்கைகளை தேர்வு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், 500 மின்சார வாகனங்களுடன் டேக்ஸி சேவையும் வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்றும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சலோ செயலி வழியாகவே இந்த டேக்ஸிகளில் மக்கள் முன்பதிவு செய்தி பயணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.