குஜராத் தேர்தல்: வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்ற வேட்பாளர், என்ன செய்தார் தெரியுமா?

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பதான் சித்கான் வெறும் 30 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 
குஜராத் தேர்தல்: வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்ற வேட்பாளர், என்ன செய்தார் தெரியுமா?

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பதான் சித்கான் வெறும் 30 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (டிசம்பர் 8) வெளியாகின. பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியமைக்கிறது. பாஜக மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 

இந்தத் தேர்தலில் பல நட்சத்திர வேட்பாளர்களும் போட்டியிட்டனர். பாஜக சார்பில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவும், ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுதான் கட்வி போட்டியிட்டார். 

இந்த நிலையில், அகமதாபாத்தின் பாபுநகர் தொகுதியில் போட்டியிட்ட ஜனதா தள வேட்பாளர் பதான் சித்கான் வெறும் 30 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

இந்த துரதிருஷ்டவசமான தோல்வி குறித்தும் மிகக் குறைந்த வாக்குகள் பெற்றது குறித்தும் பதான் சித்கான் கூறியிருப்பதாவது: எனது கட்சியினால் தான் எனக்கு மிகவும் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளன. அவர்கள் சரியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. நான் தனித்துப் போட்டியிட்டிருந்தால் கூட அதிக வாக்குகளைப் பெற்றிருப்பேன். கட்சியில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட அனைவருமே தோல்வியைத் தழுவியுள்ளோம் என்றார்.

மொத்தமாக 1,621 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பதான் பெற்ற 30 வாக்குகளே, வேட்பாளர் ஒருவரால் பெறப்பட்ட குறைந்தபட்ச வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com