அஃப்தாப் அமீனை தூக்கிலிட வேண்டும்: ஷ்ரத்தா தந்தை

அஃப்தாப் அமீனை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று ஷ்ரத்தா தந்தையின் விகாஸ் தெரிவித்துள்ளார். 
அஃப்தாப் அமீனை தூக்கிலிட வேண்டும்: ஷ்ரத்தா தந்தை

அஃப்தாப் அமீனை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று ஷ்ரத்தா தந்தையின் விகாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனது மகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளாள். வசய் காவல்துறையினரால் நான் பல பிரச்சனைகளை எதிர்கொண்டேன், அவர்கள் எனக்கு உதவியிருந்தால், என் மகள் உயிருடன் இருந்திருப்பாள். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று தில்லி போலீசார் உறுதியளித்தனர். மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் எங்களுக்கும் உறுதியளித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்.

அஃப்தாப் அமீனை சாகும் வரை தூக்கிலிட வேண்டும். எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. டேட்டிங் ஆப்ஸ் உள்ளிட்ட சில மொபைல் ஆப்ஸ்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே ஷ்ரத்தா கொலை வழக்கில் காணொளி மூலம் இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அஃப்தாப் அமீனினை மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சாகெட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் அஃப்தாப் அமீன் பூனாவாலா (28), ஷ்ரத்தா வாக்கா் (26). இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தில்லியில் சோ்ந்து வாழ்ந்தனா். இந்நிலையில், கருத்து வேறுபாட்டால் ஷ்ரத்தா வாக்கரை ஆஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டினாா். அதன் பின்னா் உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசினாா். அண்மையில், அவரை காவல் துறையினா் கைது செய்தனா். 

இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் அந்தப் பெண் கொல்லப்பட்டது 6 மாதங்களுக்குப் பின்னா் வெளியுலகுக்குத் தெரியவந்தது. இந்தச் சூழலில், கடந்த 2020-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் உள்ள வசய் பகுதியில் இருவரும் ஒன்றாக வசித்துள்ளனா். அப்போது அஃப்தாப் மீது ஷ்ரத்தா காவல் துறையிடம் கொலை மிரட்டல் புகாா் அளித்ததும் விசாரயில் தெரியவந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com