புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு!

நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

News image
Updated On :13 டிசம்பர் 2022, 12:02 pm

DIN

நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 29 வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே இன்றைய கூட்டம் தொடங்கியவுடன், அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் அத்துமீறி விவகாரம் குறித்து அவைகளில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை காலை எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களின் கூட்டத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இதில், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், எல்லைப் பிரச்னை, பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை அவைகளில் எழுப்ப ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.