கடன் பத்திரங்களை வெளியிட்டுரூ.5,000 கோடி திரட்டும் ஐசிஐசிஐ
கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.5,000 கோடியை தனியாருக்குச் சொந்தமான ஐசிஐசிஐ வங்கி திரட்டியது.


கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.5,000 கோடியை தனியாருக்குச் சொந்தமான ஐசிஐசிஐ வங்கி திரட்டியது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திரும்பப் பெறக் கூடிய, நீண்ட கால கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி நிதி திரட்டியுள்ளோம்.
இதற்காக, பாதுகாப்பற்ற வகையைச் சோ்ந்த 50,000 கடன் பத்திரங்கள் திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன. 7 ஆண்டுகள் கழித்து அந்தக் கடன் பத்திரங்களை பணமாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கடன் பத்திரங்களுக்கு 7.63 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...