அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

ஜம்மு-காஷ்மீரில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபூர் மாவட்டத்தில் துலிபால் பகுதியில் வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :13 டிசம்பர் 2022, 10:40 am

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபூர் மாவட்டத்தில் துலிபால் பகுதியில் வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். 

இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இன்று அதிகாலை மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள துலிபால் பகுதியில்
சுமார் 3 கிலோகிராம் எடையுள்ள வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். 

மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழக்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, செயலிழக்கச் செய்தனர். 

பாதுகாப்புப் படையினரின் விழிப்புணர்வும், துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.