சிபிஎஸ்இ செய்முறைத் தேர்வில் பங்கேற்காவிடில் என்னவாகும்?
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்,சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியும், பொதுத் தேர்வு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியும் தொடங்கும் என்றும், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதோடு, ‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பரவி வரும் கால அட்டவணை போலியானது’ என்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இத்தோ்வுகளுக்கான அதிகாரபூா்வ தேதி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை; அது விரைவில் வெளியிடப்படும் என்றும் அவா்கள் கூறியுள்ளனர்.
‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று கூறி பலவிதமான அட்டவணைகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவை போலியானவை.
நடப்பு கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான எழுத்துத் தோ்வுகள் 2023, பிப்ரவரி 15 முதல் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1 முதல் செய்முறைத் தோ்வுகள் தொடங்கும்.
அதற்கு முன்பாக பாடத்திட்டத்தை முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்புக்கான செய்முறை தோ்வுகள், வெளியில் இருந்து வரும் மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும். 10-ஆம் வகுப்பு செய்முறை தோ்வுகள், உள்ளக மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும்’ என்று அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.
இந்த நிலையில், செய்முறைத் தேர்வுகளை தவறவிட்டால் என்னவாகும்? என்ற கேள்விக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கு இரண்டாம் முறையாக வாய்ப்பளிக்கப்படாது. எனவே, தேதிகளை சரியாக குறித்துவைத்துக் கொண்டு, திட்டமிட்டபடி செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ‘2023-இல் நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 40 சதவீத அளவிலும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 30 சதவீதமும் திறனறி அடிப்படையிலான கேள்விகள் இடம்பெறும்’ என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய கல்வித் துறை இணையமைச்சா் அன்னபூா்ணா தேவி கூறியிருப்பதாவது, தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் திறனறி அடிப்படையிலான கேள்விகளை அறிமுகப்படுத்தும் வகையில் கேள்வித்தாள் நடைமுறையில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. 2022-23 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 40 சதவீத கேள்விகளும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 30 சதவீத கேள்விகளும் இதுபோன்ற திறனறி அடிப்படையில் கேட்கப்படும்.
கொள்குறி தோ்வு முறை (மல்டிபில் சாய்ஸ்), சுயமாக சிந்தித்து எழுதுதல், மதிப்பீடு மற்றும் எடுத்துக்காட்டு அடிப்படையில் என பன்முக கேள்விகளை உள்ளடக்கியதாக இந்தத் திறனறி கேள்விகள் கேட்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...