பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, 9 பேர் காயம்!
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தற்கொலைப் படை தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர்.


ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தற்கொலைப் படை தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட தகவலில்,
வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள மிரான்ஷா நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இன்டர் சர்வீஸ் பப்பிள் ரிலேஷன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
அண்டை நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் குறித்து தனது வருத்தத்தையும் தெரிவித்த அவர், முஸ்லிம்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துபவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...