சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்: விரைவில் முக்கிய முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பக்தர்களின் நலன் கருதி, முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பக்தர்களின் நலன் கருதி, முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார நாள்களிலும், அதைக்காட்டிலும் வார இறுதிகளிலும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும், நீண்ட நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதாலும், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாகவும், சபரிமலை தேவசம்போர்டு அதிகாரிகளுடன் பேசி, காவல்துறையினர் விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

நாள்தோறும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்புக் கருதி அவர்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தனிவரிசை ஏற்படுத்தப்பட்டதால், கூட்ட நெரிசலில் சிக்காமல் அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில், நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 90,000-க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று காவல்துறை கண்டிப்புடன் தேவசம்போடு நிர்வாகிகளிடம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறையினர் சரிபமலை தேவசம்போர்டு நிர்வாகிகளிடம் பேசி, நாள்தோறும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை 90,000 பேராகக் கட்டுப்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

தினமும் 80,000 பேர் வந்தாலே மாரக்கூட்டம் தொலைவுக்கு வரிசை நீண்டுவிடும் என்றும், பக்தர்கள் குறைந்தது 8 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதாகவும், இதனால், வரிசையில் நிற்கும் போது பல மணி நேரம் உணவோ, தண்ணீரோ இல்லாமல் நிற்பதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, நாள்தோறும் 90,000 பக்தர்கள் மட்டும் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்யும் வகையில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 90,000 பேர் டிசம்பர் 16 மற்றும் 19ஆம் தேதிகளில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துவிட்டால், அந்த தேதிகளுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com