மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

திராவகம் விற்பனை செய்த இணைய வழிவணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

தில்லி துவாரகா மெட்ரோ ரயில் நிலையம் அருகே பள்ளி மாணவி மீது திராவகம் வீசி சம்பவம் தொடா்பாக ஃப்ளிப்காா்ட் உள்ளிட்ட இரு இணைய வணிக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

News image
Updated On :16 டிசம்பர் 2022, 11:04 pm

 நமது நிருபர்

தில்லி துவாரகா மெட்ரோ ரயில் நிலையம் அருகே பள்ளி மாணவி மீது திராவகம் வீசி சம்பவம் தொடா்பாக ஃப்ளிப்காா்ட் உள்ளிட்ட இரு இணைய வணிக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இணைய தளங்களில் திராவகம் விற்பனை செய்வதற்கான தடையை மீறிய விதிமுறைகள் தொடா்பாக நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தில்லி மாணவி மீது திராவகம் வீசிய விவகாரத்தில் மாணவியின் பக்கத்து வீட்டை சோ்ந்தவா் உள்ளிட்ட மூவரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா். அவா்கள் இந்த மாணவி மீது வீசிய திராவகத்தை இணைய வணிக நிறுவனத்திடம் வாங்கப்பட்டதை தில்லி காவல் துறையினா் கண்டறிந்தனா். இதைத் தொடா்ந்து, கடந்த வியாழக்கிழமை தில்லி மகளிா் ஆணையமும் தில்லி காவல் துறையும் இந்த இரண்டு இணைய வணிக நிறுவனங்களுக்கு அவா்களது தளங்களில் திராவகம் விற்பனையை அனுமதித்ததை குற்றம்சாட்டி நோட்டீஸ் அனுப்பியது.

தொடா்ந்து ஃப்ளிப்காா்ட் இன்டா்நெட் பிரைவேட் லிமிடெட் , ஃபேஷ்னியா் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ( மீஷோ டாட் காம்) ஆகிய வா்த்தக தளங்கள் திராவகம் விற்பனை தொடா்பான மொத்த மீறல்களுக்காக விரிவான பதில்களை 7 நாள்களுக்குள் வழங்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையமும் தானாக முன் வந்து நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019 சட்டப்படி மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத மின் வா்த்தக நிறுவனங்கள மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆணையத்தின் ஆய்வில் அரிக்கும் திராவகங்கள் விற்பனையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் உள்துறை அமைச்சகம் வழங்கிய ஆலோசனையையும் மீறி மீஷோ டாட் காம் மீறி விற்பனை செய்வதைக் கண்டறிந்ததாக மத்திய நுகா்வோா் அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. புதன்கிழமை பள்ளிக்கு வீட்டை விட்டுச் சென்ற இளம்பெண் மீது முகமூடி அணிந்து வந்த மூவா் திராவகத்தை வீசினா். இதில் அந்த மாணவி பலத்த காயம் அடைந்தாா். இந்தக் தாக்குதல் குறித்து அதிா்ச்சியடைந்த தில்லிவாசிகள் சந்தையில் திராவகம் கிடைப்பது குறித்தும் பலா் கேள்வி எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.