ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

விஜயவாடாவில் 2 அரசுப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன

விஜயவாடாவில் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published On :

விஜயவாடாவில் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள வித்யாதரபுரம் டிப்போவில் அரசுப் பேருந்துகள் இன்று காலை வழக்கம்போல் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது திடீரென 2 பேருந்துகளில்  தீப் பற்றியது. இந்த சம்பவத்தில் ஒரு பேருந்து முற்றிலும் எரிந்த நிலையில் மற்றொரு பேருந்து பகுதியளவில் எரிந்துள்ளது. 

இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) ஏற்பட்ட "கசிவு" பிரச்னை காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டிப்போ மேலாளர் கூறுகையில், பேருந்துகள் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், டிப்போவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார். 

மேலும், ஆர்டிசி பேருந்துகளை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மீதும் அவர் குற்றம் சாட்டினார். விஜயவாடாவில் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.