தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சீனாவின் பெயரால் பயத்தைப் பரப்புகிறார் ராகுல்: அனுராக் தாக்குர்!

ராகுல் காந்தி சீனாவின் பெயரால் பயத்தைப் பரப்புகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆயுதப் படைகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றம் சாட்டியுள்ளார். 

News image
Updated On :17 டிசம்பர் 2022, 11:41 am

PTI

ராகுல் காந்தி சீனாவின் பெயரால் பயத்தைப் பரப்புகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆயுதப் படைகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றம் சாட்டியுள்ளார். 

சீனர்கள் ராணுவ வீரர்களை அடிக்கின்றனர் என்ற காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தாக்குர், டோக்லாமில் இந்திய வீரர்கள் சீன வீரர்களுடன் சண்டையிட்டபோது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சீனர்களுடன் சூப் குடிப்பதில் பிஸியாக இருந்தார். 

சீனா என்ற பெயரில் பயத்தைப் பரப்புவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது 1962இன் இந்தியா அல்ல, இது 2014இன் இந்தியா. 

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ஆயுதப் படைகளுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் அல்லது ரஃபேல் போர் விமானங்கள் மூலம் அரசு அதிகாரம் அளிக்கவில்லை என்றார்.

இன்று இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதியாளராக உள்ளது, இறக்குமதியாளராக இல்லை. இதுதான் ஆத்மநிர்பர் பாரத் என்றார்.

சீனா போருக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்றும், அச்சுறுத்தலைப் புறக்கணிக்க முயல்வதாகவும் ஜெய்ப்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் காந்தி உரை நிகழ்த்தினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.