கலியுகம் எப்படி இருக்கும்? யுகம் முழுக்க, எது துணை வரும்?

ஒரு சமயம் பாண்டவருள் யுதிஷ்டிரர் அல்லாத நால்வர் தனித்திருந்தனர். யுதிஷ்டிரர் (தருமர்)  அங்கு இல்லை.
கலியுகம் எப்படி இருக்கும்? யுகம் முழுக்க, எது துணை வரும்?

ஒரு சமயம் பாண்டவருள் யுதிஷ்டிரர் அல்லாத நால்வர் தனித்திருந்தனர். யுதிஷ்டிரர் (தருமர்)  அங்கு இல்லை. அப்போது கண்ணன் அங்கு வந்தார். அவரிடம் இந்த நால்வரும் கண்ணனைப் பார்த்துக் கேட்டார்கள், கலியுகம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? என வினவினர் .

கண்ணன், புன்னகைத்தவாறு கூறலானான். கலியுகம் எவ்வாறு இருக்கும் என்பதனை இப்போது ஒரு செயலால் நிரூபிக்கிறேன் என்று கூறி, கையில் வில் அம்பை எடுத்து அவர்கள் நின்றிருந்த இடத்தின் நான்கு திசைக்கும் ஒவ்வொரு திசைக்கும் ஒரு அம்பாக எய்தான். அங்கிருந்த நால்வரையும் பார்த்து கண்ணன், நீங்கள் நால்வரும் ஒவ்வொரு திசைக்கும் ஒருவராகச் சென்று அந்த அம்பை எடுத்து வாருங்கள் எனக் கட்டளை இட்டான். உடனே, அந்த நால்வரும் திசைக்கு ஒருவராக, கண்ணன் எய்த அந்த அம்பை கண்டு எடுத்துவரக் கிளம்பினார்கள்.

அர்ஜுனன் தேடிச் சென்ற திசையில் கண்ணன் எய்த அம்பைக் கண்டு எடுக்கும் போது அங்கு ஒரு இனிமையான குரலை கேட்கலானான். அந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் யாரென சுற்றிலும் திரும்பி கண்டபோது,  அங்கு ஒரு குயில் தான் இனிமையான குரலில் பாடிக்கொண்டு, ஒரு முயலினை உயிரோடு அதன் தசைகளைக் கொத்தித் தின்று கொண்டிருந்தது. ஆனால், அந்த முயல்  தமது தீனமான குரலை எழுப்பி கொண்டிருந்ததை இந்த  குயில் காணாதது போல் அதனை உண்டு கொண்டிருந்தது. அர்ஜுனன் இந்த தெய்வீக பறவையின் கோரமான செயலைக் கண்டு ஆச்சரியப்படலானான். உடனே அந்த இடத்தை விட்டு திரும்பினான். 

பீமன் அவன் தேடிச் சென்ற இடத்திலிருந்து ஒரு அம்பை எடுத்தான். அங்கு அவன் கண்ட காட்சி வியப்பாக இருந்தது. அது என்னவென்றால், நான்கு கிணறுகள் ஒரு கிணற்றைச் சுற்றி இருந்தது. அந்த நான்கு கிணற்றில் இருந்தும் சுவையான, இனிப்பான நீர் வழிந்து அவற்றிற்கு மத்தியில் உள்ள கிணற்றினுள் ஒரு சொட்டு நீரும் விழாமல் எங்கோ அடையாளம் தெரியாமல் காணாமல் போனது, ஒரு ஆச்சரியமாக இருந்தது.

நகுலன் தாம் சென்ற வழியில் கண்ட ஒரு அம்பை எடுத்துத் திரும்பலானான். திரும்பிய அந்த இடத்தில் ஒரு பசு கன்று ஈனும் தருவாயில் இருந்தது. கன்று ஈன்ற பிறகு அந்த கன்றை நாவால் நக்கிய வண்ணம் இருந்தது. கன்று சுத்தமானது பின்னரும் விடாமல் நக்கிய வண்ணம் இருந்தது. சுற்றியிருந்த மக்கள் அந்த கன்றையும் பசுவையும் பிரித்துவிட எத்தனித்தும் அது இயலாமல் போய் கன்றுக்கு காயம் ஏற்படலானது. நகுலன் இந்த சாது பிராணியின் செயலை அதன் குணத்தைக்  கண்டு வியக்கலானான்.

சகாதேவனோ அவன் சென்ற திசையில் உள்ள ஒரு மலையின் அடிவாரத்தில் அம்பைக் கண்டான். அப்போது ஒரு பெரிய கற்பாறை விழுவதைக் கண்டான். அது மலையின் சரிவில், வழியில் உள்ள பாறைகள்  மற்றும்  பெரிய மரங்களை நசுக்கிக்கொண்டும், உருண்டும் கீழே வந்து கொண்டிருந்தது, ஆனால் உடனே ஒரு சிறிய செடியில் மீது பட்டதும் நின்றுவிட்டது. இந்த செயலை கண்ட சகாதேவன் வியப்படைந்தான் .

அனைவரும் இப்போது கண்ணன் எதிரில் வந்து நின்று தாம் கண்ட அதிசயங்களை ஒவ்வொன்றாக விவரித்தனர். இதன் அர்த்தம் என்ன என வினவினர். கண்ணன் புன்னகைத்தவாறே அவற்றை விரிவாக விளக்கலானான்.

இந்த கலியுகத்தில், போதகர்கள் இனிமையான குரலை மற்றும் மிகுந்த அறிவும் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் பக்தர்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள், எப்படி அந்த குயில் இனிமையாகப் பாடியபடி உயிருள்ள முயலை அதன் தசையைக் கிழித்து உண்டதோ அது போல என்றார் .

இந்த கலியுகத்தில், ஏழைகள், நிரம்பி வழியும் சொத்துக்களுடன் கூடிய பணக்காரர்கள் மத்தியில் தாம் வாழ்ந்தாலும் பணக்காரர்கள் வீண் செலவுகள் செய்தாலும், அவர்களால் எந்த உதவியும், பணக்காரர்களிடம் இருந்து ஒரு காசும் பெறாமல், துயரத்தில் இருப்பார்கள். அந்த கிணற்றின் நீர் வீணாகச் செல்வது போல என்றார்.

இந்த கலியுகத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மிகவும் நேசிப்பார்கள் அதுவே அவர்களின் பிள்ளைகள் நாசமாவதற்குக் காரணமாகி, அவர்கள் வாழ்க்கை நாசமாகும். அது அந்த பசுவின் செயலை ஒத்ததாக இது இருக்கும் என்றார்.

இந்த கலியுகத்தில் மக்கள் தமது குண சீர்கேட்டால் யார் என்ன சொன்னாலும் தறிகெட்டு விளங்குவர். எப்படி அந்த பாறை உருண்டு சரிந்ததோ அதுபோல. ஆனால் கடைசியில் அது ஒரு சிறு செடியின் முன் வந்து தமது ஓட்டத்தை இழந்து நின்றது போல, கடவுளின் நாமத்தை யார் சொல்லுவதால், அவர்தம் சரிவினை தடுத்து நிறுத்தும் குவிமாடம் போல கடவுள் விளங்குவார். இதுவே மக்கள், மேலும் வீழாமல் தடுக்கும் உபாயமாகும் என்பதை விளக்குவதாகும் என்றார்.  

இந்த கதை, ஸ்ரீமத் பாகவதத்தில், உத்தவ கீதையில் சொல்லப்பட்டது, உணர்த்துவது யாதெனில், இறை நாமம் ஒன்றே நம்மை நிச்சயம் வீழ்த்தாமல் இருந்து காக்கும். அது இறை நாமமாகவோ அல்லது இறையுணர்வை, இறைவனின் மகிமைகளை அறிந்த மகான்களின் நாமமாகக் கூட இருக்கலாம். 

ஆம்! அது ஷீர்டி சாய் பாபாவோ / ராகவேந்திரரோ / ஏசு நாதரோ / நபிகள் நாயகமோ யாருடைய  நாமமாக இருந்தாலும் அதனை ஜெபித்தோம் என்றால், இந்த கலியுகத்தில் நிச்சயம் அது துணை நின்று அனைவரும் காக்கப்படுவோம். அமைதியும் சந்தோஷமும் நிச்சயம் கிட்டும் என்பதே ஆகும். 

அவ்வாறு இறை நாமம் ஜெபிக்கும் போது நாம் மற்றவர்களுக்கும், மற்ற ஜீவ ராசிகளுக்கும் அறியாமல் கூட தீங்கு செய்யாமல் இருப்போம். இது ஊழ்வினைகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு, ஜோதிடம் சொல்லும் சிறந்த பரிகாரமும் ஆகும். 

தொடர்புக்கு : 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com