ஏப்ரல் 1 முதல் ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்! ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தானில் ஏப்ரல் 1 முதல் ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜஸ்தானில் ஏப்ரல் 1 முதல் ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும், உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் ரூ.500-க்கு சமையல் எரிவாயு உருளை வழங்க உள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் முதல்வர் அசோக் கெலாட் இன்று அறிவித்துள்ளார்.

"அடுத்த மாத பட்ஜெட்டுக்கு தயாராகி வருகிறேன். இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகளை வழங்குகிறார். ஆனால் சமையல் எரிவாயு உருளை காலியாக உள்ளது. 

ஏனெனில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் இப்போது  ரூ.400 முதல் ரூ.1,040 வரை உள்ளன" என்று அசோக் கெலாட்  கூறினார்.

ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com