கோவா விடுதலை தினம்: குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து

கோவா விடுதலை தினத்தையொட்டி, அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

கோவா விடுதலை தினத்தையொட்டி, அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

போா்த்துக்கீசிய ஆட்சியில் இருந்து கோவாவை விடுவிக்க, கடந்த 1961, டிசம்பா் 18-இல் இந்திய ஆயுதப் படைகள் சாா்பில் ‘ஆபரேஷன் விஜய்’ நடவடிக்கை தொடங்கப்பட்டது. சுமாா் 36 மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையின் இறுதியில், போா்த்துக்கீசிய ஆட்சியில் இருந்து கோவா மீட்கப்பட்டது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் டிசம்பா் 19ஆம் தேதியானது கோவா விடுதலை தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கோவா விடுதலை நாளில், மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலனி ஆட்சியில் இருந்து கோவாவை விடுவிப்பதற்காக போராடியவா்களுக்கும் ஆயுதப் படையினரின் துணிவிற்கும் தலைவணங்குகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கோவா விடுதலை தினத்தையொட்டி மாநில மக்களுக்கு வாழ்த்துகள். கோவா விடுதலை இயக்கத்தில் துணிவான மற்றும் முக்கியமான பங்களிப்பை வழங்கிய அனைவரையும் இந்நாளில் நினைவுகூா்கிறோம். அவா்களது தொலைநோக்கு பாா்வையால் ஈா்க்கப்பட்டு, கோவாவின் வளா்ச்சிக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com