புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அவதார் 2 பார்த்துக் கொண்டிருந்தவர் மாரடைப்பால் பலி!

ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்தில்  அவதார் 2 திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் பலியானார்.

News image

கோப்புப்படம்

Updated On :21 டிசம்பர் 2022, 8:32 am

DIN

ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்தில்  அவதார் 2 திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் பலியானார்.

ஆந்திரத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரம் நகரில் அவதார் 2 படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமி ரெட்டி ஸ்ரீனு என்பவர் என்பவர் தனது சகோதரர்  ராஜுவுடன் திரையங்கில் அவதார் 2 பார்த்துக் கொண்டிருந்த போது, ஸ்ரீனு மயங்கி விழுந்தார். அவரது சகோதரர் உடனடியாக அவரை அருகில் உள்ள பெத்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர், மருத்துவமனையில் ஸ்ரீனுவை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். உயிரிழந்த லட்சுமி ரெட்டி ஸ்ரீனுவுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.