குஜராத் பிரசாரத்தில் கரோனா விதிமுறைகளை மோடி பின்பற்றினாரா? காங்கிரஸ் கேள்வி

கரோனா விதிமுறைகளை குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பின்பற்றினாரா என்று காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதீர் ரஞ்சன் செளத்ரி(கோப்புப்படம்)
அதீர் ரஞ்சன் செளத்ரி(கோப்புப்படம்)

கரோனா விதிமுறைகளை குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பின்பற்றினாரா என்று காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியிருந்தார். மேலும், கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் நடைப்பயணத்திற்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி,

மன்சுக் மாண்டவியாவுக்கு ராகுல் காந்தியின் நடைப்பயணம் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், மக்கள் விரும்பி இணைந்துள்ளனர். மக்களின் கவனத்தை மாண்டவியா திசை திருப்புகிறார்.

குஜராத் மற்றும் ஹிமாசல் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கரோனா விதிமுறைகளை பின்பற்றினாரா? என பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில்,

ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு மக்களின் ஆதரவு பெருகியுள்ளதால், அதை சீர்குலைப்பதே பாஜகவின் எண்ணமாக உள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு திரிபுராவில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் மோடி கரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை. மத்திய அமைச்சருக்கு உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில் பிரதமருக்கு முதலில் கடிதம் எழுத வேண்டும் எனத் தெரிவித்தார்.

காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து மாண்டவியா, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நடைப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளதாக ராஜஸ்தானின் மூன்று எம்.பி.க்கள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதேபோல் நடைப்பயணத்தில் பங்கேற்ற ஹிமாசல் முதல்வருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நிபுணர்களின் ஆலோசனைக்கு பிறகுதான் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com