ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ராஜஸ்தானில் முடிவடைந்து ஹரியாணாவில் தொடங்கியுள்ளது.
வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து நேற்று மாலை ஹரியாணா மாநிலத்திற்குள் நுழைந்தது.

ஹரியாணா மாநிலத்திற்குள் நுழைந்த ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தீபேந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் வரவேற்றனர்.
இன்று 106-வது நாளாக ஹரியாணா மாநிலத்தில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் தொடர்ந்து வருகின்றது.
இந்த நடைப்பயணமானது மொத்தம் 3,570 கிலோ மீட்டர் கடந்து 150-வது நாளில் காஷ்மீரை அடைகிறது.
ஒற்றுமைக்கான நடைப்பயணம் முடிவடைய இன்னும் 44 நாள்களே உள்ள நிலையில், நடைப்பயணத்தில் பங்கேற்போர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற கரோனா விதிமுறைகளை பின்பற்றாவிடில் நடைப்பயணத்திற்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காங்கிரஸுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியரசுத்தலைவர் ஆட்சி திணிப்பு! மக்களின் குடியுரிமையைப் பறிக்க பாஜக திட்டம்! - மமதா

நியூசிலாந்து வீரர்களைப் பாராட்டிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர்!
தினப்பலன்கள் - கடகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 82 காசுகள் சரிந்து ரூ. 93.71ஆக நிறைவு!
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

