அசாமின் குவஹாட்டியில் 16 மணி நேரம் 35 நிமிடத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து இந்திய விமான நிலைய ஊழியர் ஒருவர் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
55 வயதான ரதுல் குமார் ஜகாரியா இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளார். குவாஹாட்டியில் உள்ள லோக்பிரியா பர்தோலி சர்வதேச விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இதையும் படிக்க: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸா?
இந்த சாதனை குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் தரப்பில் கூறியதாவது: ரதுல் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அசாரா காவல் நிலையத்தில் இருந்து காலை 4.03 மணிக்கு நடக்கத் தொடங்கினார். அவர் போகோ பகுதிக்கு சென்று மீண்டும் அதே நாளில் அசாரா காவல் நிலையத்துக்கு இரவு 8.38 மணிக்கு மீண்டும் வந்தடைந்தார். அவர் 16 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களில் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சிக்கிம்: ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 வீரர்கள் பலி
இதனையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் ரதுல் குமார் ஜகாரியாவுக்கு நேற்று (டிசம்பர் 22) பாராட்டு விழா நடத்தியது. இந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற குவஹாட்டி சர்வதேச விமான நிலையத்தின் முதன்மை அலுவலர் சினேகாசிஸ் தத்தா, ரதும் குமார் ஜகாரியாவுக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்வில் அசாரா விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பேளூா் உருது பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

திமுகவினா் விழிப்புணா்வு பிரசாரம்

காபி சாகுபடி விவசாயிகளுக்கு தொழில்நுட்பக் கருத்தரங்கு

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

