கரோனா அறிவுறுத்தல்களை வெளியிட்டது இந்திய ராணுவம்

ராணுவ வீரர்களுக்கு கரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்களுக்கான அறிவுறுத்தலை இந்திய ராணுவம் வெளியிட்டிருக்கிறது.
கரோனா அறிவுறுத்தல்களை வெளியிட்டது இந்திய ராணுவம்

சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராணுவ வீரர்களுக்கு கரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்களுக்கான அறிவுறுத்தலை இந்திய ராணுவம் வெளியிட்டிருக்கிறது.

அதிக மக்கள் கூடும் மற்றும் உள்ளரங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், நாட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவிட்டன.

இதன் தொடர்ச்சியாக, இந்திய ராணுவம் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தல் செய்தியில், ராணுவ வீரர்கள் தங்களது கைகளை அவ்வப்போது சோப்புப் போட்டுக் கழுவவும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தாங்களாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறும், கரோனா உறுதி செய்யப்பட்டால் ஏழு நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளவும், நோய் தீவிரமாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்ட சிகிச்சை பெறவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com