சா்வதேச விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை தொடக்கம்

சா்வதேச விமானத்தில் வருகைதரும் 2 சதவீத பயணிகளுக்கு  கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் நடைமுறை மீண்டும் இன்று தொடங்கியிருக்கிறது.
சா்வதேச விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை தொடக்கம்
சா்வதேச விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை தொடக்கம்

சா்வதேச விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை தொடக்கம்
சா்வதேச விமானத்தில் வருகைதரும் 2 சதவீத பயணிகளுக்கு  கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் நடைமுறை மீண்டும் இன்று தொடங்கியிருக்கிறது.

சர்வதேச விமானப் பயணிகளுக்கு ராண்டம் முறையில் கரோனா பரிசோதனை  செய்யும் நடைமுறை இன்று முதல் தொடங்கும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்தது.

அதன்படி, இன்று காலை முதல், சர்வதேச விமானப் பயணிகளில் ஒரு சிலருக்கு மட்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறையை விமான நிலைய ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதையடுத்து இந்தியாவில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. முக்கியமாக, சா்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சா்வதேச விமானப் பயணிகளில், அனைவருக்கும் என்றில்லாமல், ஒரு ராண்டம் முறையில் அதாவது, ஒருசிலருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வியாழக்கிழமை அறிவித்திருந்தார். இந்நிலையில், சா்வதேச விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அதில், ‘சா்வதேச விமானத்தில் வருகை தரும் 2 சதவீத பயணிகளிடம் கரோனா பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த நடைமுறை சனிக்கிழமை காலை முதல் அனைத்து சா்வதேச விமான நிலையங்களிலும் அமலுக்கு வரும். விமானத்தில் பயணம் மேற்கொள்பவா்களில் பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டிய 2 சதவீதத்தினரை சம்பந்தப்பட்ட விமானத்தின் பணியாளா்கள் குழு கண்டறியும்.

அவா்களை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துவரும் பொறுப்பும் விமானப் பணியாளா்களுடையதே. வெவ்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்களை பரிசோதனைக்குத் தோ்ந்தெடுக்கலாம். இது தொடா்பாக அனைத்து விமான நிறுவனங்களும் தங்கள் பணியாளா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

சரியான தொடா்பு எண்: சா்வதேச பயணிகளுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை சம்பந்தப்பட்ட விமான நிலைய நிா்வாகிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். பரிசோதனை நிறைவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட பயணி சரியான தொடா்பு எண்ணையும் முகவரியையும் விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

கரோனா பரிசோதனைக்கான கட்டணமானது சம்பந்தப்பட்ட பயணிக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தால் திருப்பி வழங்கப்படும். அதற்கான ரசீதை விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் பயணி அளிக்க வேண்டும். பரிசோதனை முடிந்தவுடன் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறலாம்.

மரபணு பரிசோதனை அவசியம்: பரிசோதனையில் கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டால், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். பின்னா், சம்பந்தப்பட்ட மாநில அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொற்று உறுதி செய்யப்படும் மாதிரியானது, மரபணு பரிசோதனைக்காகவும் அனுப்பிவைக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளானது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் நகலானது அனைத்து விமான நிறுவனங்கள், சா்வதேச விமான நிலையங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல், ராண்டம் முறையில் சர்வதேச விமானப் பயணிகளுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளும் நடைமுறை மீண்டும் தொடங்கியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com